» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணிமுத்தாறு அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

வெள்ளி 13, டிசம்பர் 2019 7:46:31 PM (IST)திருநெல்வேலி மாவட்ட மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் (13.12.2019) திறந்து வைத்து மலர் நெல்விதைகளை தூவினார்.

தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்ததாவது:- திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பிரதானக்கால்வாய் பாசனத்திற்கு  மணிமுத்தாறு நீர்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு பிரதானக் கால்வாயில் 1வது மற்றும் 2வது ரீச்சுகளின் கீழ் உள்ள 11134 ஏக்கர் மறைமுக பாசன பரப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிசானபருவ சாகுபடிக்காக 13.12.2019 முதல் 31.03.2020 வரை 110 நாட்களுக்கு 1639 மில்லியன் கன அடிக்கு மிகாமல் மணிமுத்தாறு பிரதானக் கால்வாயில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள 171 பாசன குளங்கள் பயன்பெறும் விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் நீர் வினியோக பணியில் பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory