» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

வெள்ளி 13, டிசம்பர் 2019 8:25:48 PM (IST)

வி.கே.புரம் மற்றும் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தஇருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

முக்கூடல் காவல்நிலையம் மற்றும் விகேபுரம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள  பவுல்ரெக்ஸ்(27) த/பெ சிலுவையா, சிங்கம்பாறை, முக்கூடல் மற்றும் ஆரோக்கியராஜ்(24),த/பெ பால்துரை,  விகேபுரம், ஆகியோர் அடிதடி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா, பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.இதன்படி, வி.கே.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி 12.12.2019-ம் தேதி மேற்படி பவுல்ரெக்ஸ் மற்றும் ஆரோக்கியராஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சமர்ப்பித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory