» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிராக்டர் கடனை கட்ட முடியாத விவசாயி தற்கொலை

சனி 14, டிசம்பர் 2019 11:51:28 AM (IST)

செங்கோட்டை அருகே டிராக்டர் கடனை கட்ட முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த நெடுவயல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (29). இவர் வங்கி கடன் பெற்று டிராக்டர் வாங்கியதாகவும் ஆனால் போதுமான விவசாய வேலைகள் நடைபெறாததால் இவரால் கடனை அடைக்க முடியவில்லையாம். இதனால் மனமுடைந்து மதுகுடிக்க தொடங்கினார். இதையறிந்த அவரது தாயார், முத்துக்குமாரை திட்டினார். இதில் விரக்தியடைந்த முத்துக்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory