» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

சனி 14, டிசம்பர் 2019 1:00:44 PM (IST)

ஆலங்குளம் அருகே  மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியானார்.

ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பான் குளத்தை சேர்ந்தவர் அருண் (31), விவசாயி. இவர் வீட்டில் மின் மோட்டார் வைத்து பயன்படுத்தி வந்தார். சம்பவத்தன்று  வீட்டில் பின்புறம் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததாம். மின்சாரம் தாக்கியதில் அருண் அதே இடத்தில் அசையாமல் நின்றுள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அவர் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் கம்பை வைத்து தட்டினர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். 

உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ஆலங்குளம் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக டாக்டர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory