» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் - மினி பஸ் மோதல் : ஒர்க்ஷாப் உரிமையாளர் பலி

சனி 14, டிசம்பர் 2019 5:41:07 PM (IST)

தென்காசி அருகே பைக் மீது மினிபஸ் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒர்க்ஷாப் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி புதுமனை 5ம் தெருவைச் சேர்ந்தவர் தர்மக்கண் தேவராஜ் (60). இவர் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் பைக்கில் தென்காசி அருகே ஆசாத்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி பஸ் திடீரென பைக் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த தர்மக்கண் தேவராஜ் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.இச்சம்பவம் குறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory