» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இடத்தகராறில் ஏற்பட்ட மோதல்- 3 பேர் காயம்

வெள்ளி 3, ஜனவரி 2020 7:46:48 PM (IST)

கூடங்குளத்தில் இடத்தகராறில் மோதலில் 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் செல்வ பொண்ணு (51). அவரது தம்பி குமார் (45). இவர்களது வீடு அருகருகே உள்ளது. செல்வபொண்ணு ஹைதராபாத்தில் வேலை பார்த்து வருகிறார். குமார் ஊரிலேயே விவசாயம் செய்து வருகிறார். அவர்கள் இருவருக்கிடையே இடத் தகராறு இருந்து வந்ததாகவும் அதுதொடர்பாக இரு குடும்பத்தினரிடையே சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது,

அப்போது இருகுடும்பத்தினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் செல்வபொண்ணுவின் மனைவி ரமா (47), மகன் அரவிந்த் (23), தம்பி குமார் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். ரமா , அரவிந்த் ஆகியோர் அஞ்சுகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும், குமார் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதல் தொடர்பாக செல்வபொண்ணு மற்றும் குமார் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory