» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்

சனி 4, ஜனவரி 2020 10:16:49 AM (IST)

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் (75) சென்னையில் காலமானார். 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பாண்டியன். 1980-ஆம் ஆண்டு தமிழக சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்தார். அதிமுக எம்எல்ஏவாகவும் எம்பியாகவும் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989-இல் அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது ஜானகி அணி சார்பில் பி எச் பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார். 

இவரது மகன் மனோஜ் பாண்டியன், 2001- இல் எம்எல்ஏவாக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பி.எச் பாண்டியன் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory