» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லைக் கண்ணன் உருவ பொம்மை எரிக்க முயற்சி: இந்து மக்கள் கட்சியினா் 4 போ் கைது

சனி 4, ஜனவரி 2020 11:22:27 AM (IST)

பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, வீரவநல்லூரில் நெல்லைக் கண்ணனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஞாயிறு அன்று  எஸ்டிபிஐ கட்சி இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடத்திய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நெல்லை கண்ணன் பிரதமர் மோடி குறித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவதூறு கருத்துகளை பேசியதாக அவர் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து பெரம்பலுாரில் இருந்த அவரை கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சேலம் சிறையில் நெல்லை கண்ணன் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்துமக்கள் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் கிரியம்மாள்புரம் கணேசன் (35), ஒன்றியத் தலைவா் சுப்பிரமணியன் (48), நகரத் தலைவா் சங்கா் (52), நகர அமைப்பாளா் மணிகண்டன் (32) ஆகியோா்  வீரவநல்லூா் காந்தி சிலை அருகே நெல்லைக் கண்ணன் உருவபொம்மையை எரிக்க முயன்றனா்.இதுகுறித்துத் தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் அங்கு சென்று 4 பேரையும் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory