» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பூட்டிய வீட்டில் புகுந்து பொருட்கள் திருட்டு

சனி 4, ஜனவரி 2020 12:14:15 PM (IST)

திசையன்விளையில் டீ கடைக்காரர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த டிவி, பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை-நவ்வலடி ரோடு காமராஜர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (45). இவர் மும்பையில் டீ கடை வைத்துள்ளார். நந்தகோபால் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.  கடந்த 31-ந்தேதி இவரது மனைவி சேர்மகனி வீட்டை பூட்டி விட்டு மும்பை சென்றார். 

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த டிவி, பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory