» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - நெல்லை ஆட்சியர் தகவல்

சனி 4, ஜனவரி 2020 1:18:24 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று நெல்லை ஆட்சியர் ‌ஷில்பா கூறிஉள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-நெல்லை மாவட்டத்தில் 1.1.2020 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 23-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் சார் ஆட்சியர், தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதை வாக்காளர்கள் பார்வையிட்டு தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 23-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக படிவம்-6 வழங்க வேண்டும்.இறந்தவர்கள் பெயரை நீக்க படிவம்-7, பெயர், பாலினம், உறவுமுறை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை), நாளை மற்றும் 11-ந்தேதி, 12-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடக்கிறது. நெதகுதி உள்ள அனைவரும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குச்சாவடி மைய அலுவலரிடம் நேரில் மனு அளிக்கலாம்.மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான WWW.NVSP.IN (National Voters service Portal) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory