» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அகில இந்திய கைப்பந்து போட்டி தமிழக அணியில் சுரண்டை மாணவிகள்

சனி 4, ஜனவரி 2020 5:26:12 PM (IST)
அகில இந்திய அளவில் கேலோ இந்தியா கைப்பந்து போட்டி வருகிற ஜனவரி 6ம் தேதி முதல் 16 வரை  அஸ்ஸாம் மாநிலம் ஹவுகாத்தியில் நடைபெறுகிறது.  இதில் தமிழக அணியில் சுரண்டை மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் தமிழக அணியினர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த அணியில் தமிழக அணியில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சுரண்டையை சேர்ந்த அந்தோனி மகள் பிளஸ்ஸி ரஞ்சிதா. 17 வயதிற்க்கு உட்பட்டோருக்கான பிரிவில் சுரண்டை சசிகுமார் மகள் தர்ஷனி, 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் சுரண்டை லோகநாதன் மகள் கீர்த்திகா ஆகிய 3 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்‌.

அகில இந்திய அளவில் நடக்கும் கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியில் இடம் பிடித்துள்ள சுரண்டை மாணவிகளை சுரண்டை காமராஜர் கைப்பந்து குழு கெளரவத் தலைவர் கணேசன், மற்றும் குழு நிர்வாகிகள் அழகுதுரை, தலைவர் சாம் ராஜா, செயலாளர் சசிகுமார், பொருளாளர் சந்திரசேகர அருணகிரி மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory