» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

சனி 4, ஜனவரி 2020 5:58:39 PM (IST)

தென்காசி அருகே குளத்தில் தண்ணீர் திறக்கச் சென்ற விவசாயி குளத்து மடையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

தென்காசி அருகே கீழப்புலியூர் உச்சிமகாளி அம்மன் கோவில் 4வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (60). விவசாயி. இவர் கீழப்புலியூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியையும் செய்து வந்தார். இவர் வயலுக்கு தண்ணீர்; பாய்ச்ச செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லையாம். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. இதனால் இதுகுறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பசாமியின் வேஷ்டி, சட்டை கீழப்புலியூர் குளத்து மடை அருகே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதனால் கருப்பசாமி குளத்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதி தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மோகன், விஜயன், செந்தில், செல்வன், பாபு ஆகியோர் ரப்பர் படகு மூலம் குளத்தில் கருப்பசாமியை தேடினர். தீவிர தேடுதலுக்குப் பின்னர் குளத்தின் மடையில் கருப்பசாமி உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச குளத்து மடையை கருப்பசாமி திறக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்சி இறந்துள்ளார் என தெரியவந்தது. இறந்த கருப்பசாமிக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், லெட்சுமணன், தம்பிரான் ஆகிய இரு மகன்களும், வள்ளி என்ற மகளும் உள்னர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory