» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு : நகை வியாபாரிகள் 2 பேர் கைது

சனி 4, ஜனவரி 2020 8:05:29 PM (IST)

தென்காசியில் பூக்கடைக் காரரை அரிவாளால் வெட்டியதாக நகை கடைக்காரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி பூங்கொடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகிரிசாமி (44). இவர் தென்காசியில் பூக்கடை நடத்தி வருகிறார். அதே தெருவில் வசித்து வருபவர் ஷேக் அலி ( 35). அவரது தம்பி முகைதீன் முதலாளி ( 33). இவர்கள் தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார்கள். சேக் அலி  தனது வீட்டின் முன்பு சிமெண்ட் தளம் போட்டு வருகிறார். அதற்காக கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டியுள்ளார். இதனை அழகிரிசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சேக் அலி அவரது தம்பி முகைதீன் முதலாளி அவருடைய தாயார் ரைக்காள் ஆகியோர் அழகிரிக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

மேலும் தகராறு முற்றிய நிலையில் சேக்அலி  அழகிரிசாமியை  அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகிரிசாமி உடனடியாக சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சேக்அலி  மற்றும் அவரது தம்பி முகைதீன் முதலாளி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ரைக்காள் என்பவரை  போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory