» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சனி 4, ஜனவரி 2020 8:40:57 PM (IST)திருநெல்வேலி மாவட்டம் இராமையன்பட்டியில் உள்ள  கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற கருத்தரங்கு கண்காட்சி நிறைவு விழாவில்  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை இன்று (04.01.2020) வழங்கினார்.  

கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-தமிழ்நாடு  கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கால்நடை  அறிவியல் தமிழ் இயக்கம் மற்றும் நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்  இணைந்து அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் ஆட்டினங்களில் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் மண்டல அளவில் பண்ணையாளர்களுக்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை நடத்துகிறது. 

இக்கண்காட்சி நேற்று ஆரம்பமானது இக்கண்காட்சியில் ஆட்டினங்களில் உள்ள உற்பத்தி திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கியுள்ளனர் இந்த தொழில்நுட்ப எல்லாம் பயன்படுத்தி கால்நடை வளர்த்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.முன்னதாக கால்நடைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி.,கள் முத்துகருப்பன், விஜிலா சத்தியானாந்த், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன்,நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் துணை வேந்தர் லசந்திரன், கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிசாமி,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், அலுவலர்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory