» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடையநல்லூரில் இறப்பிலும் இணைபிரியா தம்பதியினர்

திங்கள் 6, ஜனவரி 2020 10:59:08 AM (IST)

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மனைவி இறந்த செய்த கேட்ட கணவர் அதிர்ச்சியில் மரணமடைந்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பக சுந்தர் விநாயகர் கோவில் தெருவில் வசித்தவர். கருப்பசாமி (75). இவரது மனைவி வடிவம்மாள் (70). உடல் நலக்குறைவு காரணமாக வடிவம்மாள் நேற்று இரவு இறந்தார். இதனைக் கேள்விபட்ட கருப்பசாமி அதிர்ச்சியில் மயக்கமாகி கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் கருப்பசாமியின் உயிரும் பிரிந்தது. 

இணைந்து வாழ்க்கை நடத்திய இத்தம்பதியினர் இறப்பிலும் இணைபிரியாமல் இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திரளான பொதுமக்கள் இறப்பிலும் இணைபிரியாத அத்தம்பதியினரின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இறந்த இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory