» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டம் : அமைச்சர் ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்

திங்கள் 6, ஜனவரி 2020 11:48:14 AM (IST)தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டத்தினை அமைச்சர் ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாய விலைக்கடை மூலம் பச்சரிசி, வெல்லம், ரூ.1000ம் உள்ளிட்ட சிறப்பு பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சங்கரன்கோவிலில் நடைபெற்றது. 

விழாவிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேச ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பையாபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory