» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் : அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

திங்கள் 6, ஜனவரி 2020 1:20:41 PM (IST)

அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தென்காசி மாவட்ட சங்கம் துவக்க விழா புதிய நிர்வாகிகள் தேர்தல் தென்காசியில் உள்ள சங்க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் திருநெல்வேலி மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தென்காசி வட்ட கிளை பொருளாளர் சுரேஷ் வரவேற்று பேசினார்.விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முக ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்காசி மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார்.விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு பரிந்துரைகளில் ஏற்கப்பட்டுள்ள அனைத்து முரண்பாடுகளையும் நீக்கி ஆணை வெளியிட வேண்டும்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து வரும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக சுப்பிரமணியன் (வேளாண்மை துறை), செயலாளராக சந்திர தாஸ் (சுகாதாரத்துறை)., பொருளாளராக ராம்பிரசாத் (பொதுப்பணித்துறை), துணைத்தலைவர்களாக வெங்கடேஸ்வரன் (கருவூலத்துறை), சுரேஷ் (கூட்டுறவுத்துறை), செல்லையா (ஊரக வளர்ச்சித்துறை), பேப்பர் ஆனந்தன் (கல்வித்துறை), துணைத் தலைவர்களாக அந்தோணிராஜ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் சிறப்பு விருந்தினர் மாநிலத் தலைவர் சண்முக ராஜன்இ முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சீதாராமன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory