» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி நோன்பு வைத்து பிரார்த்தனை

செவ்வாய் 7, ஜனவரி 2020 10:16:08 AM (IST)குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி சுரண்டையில் நோன்பு வைத்து பிரார்த்தனை நடைபெற்றது.

சமீபத்தில் மத்திய அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இதனை வாபஸ் வாங்க கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இச் சட்டத்தை திரும்ப பெற கோரி சுரண்டை சிவகுருநாதபுரம் முகைதீன் ஆண்டவர் ஷாபி ஜும் ஆ பள்ளி வாசலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என நானுறுக்கும் அதிகமானோர் சிறப்பு தொழுகை நடத்தி நோன்பு திறந்தனர். இதில் ஜமாத்தார்கள் தலைவர் ஜமாலுதீன், செயலாளர் பீர்முகம்மது, பொருப்பாளர் சாகுல் ஹமீது மஹ்ரி உள்ளிட்டோர் துவா செய்து பிரார்த்தனை செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory