» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டையில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் : வியாபாரிகள் சங்கங்கள் கோரிக்கை

செவ்வாய் 7, ஜனவரி 2020 10:48:43 AM (IST)சுரண்டையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுரண்டையில் அமைக்க வேண்டும் என சுரண்டை பகுதி வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.இது குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜ், துணை தலைவர் சிவசக்தி முத்தையா, செய்தி தொடர்பாளர் ராஜகுமார்,  வத்தல் வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ரத்தினசாமி, ராஜேந்திரன், முத்துமணி,  மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், தர்மம்,  மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் தயாள் சுந்தரை நேரில் சந்தித்து சுரண்டையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தேவையான இடங்களை  இலவசமாக ஏற்பாடு செய்து தருவதாக மனு வழங்கினர்.

ஏற்கனவே சுரண்டையில் அரசு கல்லூரி, வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள நிலையில் சுரண்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுக்கும் நடு மையமான நகரமாக விளங்குவதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தேவையான இடவசதி, போக்குவரத்து, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சுரண்டை பேரூராட்சி பகுதிக்குள் உள்ளன. மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory