» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதில் பூ வைத்து மனு கொடுக்க வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் நாளில் விநோதம்

செவ்வாய் 7, ஜனவரி 2020 1:03:22 PM (IST)

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது . இதில் ஒருவர் காதில் பூ சுற்றிக் கொண்டு தனது கோரிக்கை மனுவை அளித்தார்.

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தென்காசி  தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.இதற்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா தென்காசி கோட்டாட்சியர் தலைவர் பழனிக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வரிசையில் நின்று தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஒருவர் காதில் பூ சுற்றிக் கொண்டு தனது கோரிக்கை மனுவை கொடுக்க மண்டபத்துக்குள் வந்தார். அவர் கொடுத்த மனுவில் தென்காசி எல் ஆர் எஸ் பாளையம்,  மார்க்கெட் பகுதிகளில் கழிவுநீர் ஓடை அடைப்பால் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனை சரி செய்ய கோரி தென்காசி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தென்காசி எல் ஆர் எஸ் பாளையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார்.முன்னாள் பாஜக தலைவர் அருணாசலம் கொடுத்த மனுவில் குத்துக்கல்வலசை பகுதியில் அரசு பொது நூலகம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார்.

வடகரை  அதிமுக செயலாளர் அலியார் கொடுத்த மனுவில் பண்பொழி பேரூராட்சி பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும் தற்போது அந்த இடத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தை கொண்டு செல்ல உள்ளதாக அறிகிறோம். 

பண்பொழியில் செயல்பட்டுவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகப்படியான வருமானம் வருவது வடகரை பேரூராட்சி பகுதி மக்களின் மூலம் தான். எனவே பண்பொழியில் செயல்பட்டுவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி  பகுதியில் அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டத்தில் காலை முதல் மதியம் வரை 928 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்கள். கோரிக்கை மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர்தயாளன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory