» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு விசாரணை ஜன.9ம் தேதி தள்ளிவைப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2020 6:34:01 PM (IST)

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கடந்த 29-ந்தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக கூறினார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் அவர் கடந்த 3-ந்தேதி ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது சில காரணங்களுக்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று மீண்டும் ஜாமீன் கேட்டு மனு அளித்தார்.நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிவமுத்து ஜாமீன் வழங்குவது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தார்.மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory