» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று கொள்ள அழைப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2020 8:16:50 PM (IST)

தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 (ரூபாய் ஆயிரமும்) வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டை மூலமாக வழங்கப்படும். நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி  09.01.2020 முதல் 12.01.2020 முடிய பொங்கல் பரிசு அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ரூ.1000ஃ- வழங்கப்படும். விடுப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.01.2020 அன்று பொங்கல் பரிசு அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ரூ.1000 வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு அந்தந்த நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. மேலும் எந்த பகுதிக்கு எந்த தேதியில் விநியோகம் செய்யப்படும் என்ற விபரம் அடங்கிய அறிவிப்பு நியாய விலைக்கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும். எனவே பொது மக்கள் எந்தவித சிரமமும் இன்றி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் சிறப்பு தொகுப்பினை பெற்று கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory