» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி கோவில் ராஜகோபுரம் நிலைத்தன்மை குறித்து ஆய்வு

புதன் 8, ஜனவரி 2020 11:44:31 AM (IST)தென்காசி காசிவிசுவநாதர் கோவில் ராஜகோபுரத்தின் நிலைத் தன்மை குறித்து சென்னை ஐஐடி குழுவினரும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி குழுவினரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 13 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் கோயிலின் கோபுரம் மற்றும் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல்கள் உள்ளன. இதனையும் நல்ல முறையில் சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் திருப்பணிகளை மேற் கொள்வதற்காக பூர்வாங்க ஆய்வுப் பணி தொடங்கியது.ஆய்வினை சென்னை ஐஐடி பேராசிரியர் சுதர்சன் தலைமையிலான குழுவினரும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி ஸ்ட்ரக்சுரல் பிரிவு தலைமைப் பேராசிரியர் சித்தார்த்தன் தலைமையிலான குழுவினரும் மேற்கொண்டனர்.இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது

கட்டிடங்களின் அடித்தள உறுதித்தன்மையை ஆய்வு செய்ய மண் பரிசோதனை கட்டிடம் மற்றும் ராஜகோபுரத்தின் உறுதித்தன்மை மற்றும் அவற்றில் உள்ள விரிசல்களை சரி செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் ஆய்வுக் குழுவினர் விரிவான திட்ட அறிக்கையை அரசிற்கு அனுப்பி அதன்படி கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.  ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ. நாராயணன் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory