» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி அருகே ஆசிரியருக்கு கொலை மிரட்டல்

புதன் 8, ஜனவரி 2020 12:30:25 PM (IST)

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை நாங்குநேரி அருகே வசித்து வருபவல் பாஸ்கர் (53). இவர்  பள்ளி ஆசிரியராக உள்ளார். சம்பவத்தன்று பாஸ்கர் மூலைக்கரைப்பட்டி பஜாருக்கு செல்வதற்காக தான் தோன்றி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு பைக்கில் வந்த தெற்கு காரசேரியை சேர்ந்த ஊய்காட்டான் என்பவர் பாஸ்கரிடம் ரூ.2000  பணம் கேட்டாராம். 

ஆனால் அதற்கு பாஸ்கர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஊய்காட்டான் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஊய்காட்டானை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory