» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊராட்சியை அம்பை தாலுகாவில் இணைக்க நடவடிக்கை : பொதுமக்கள் மகிழ்ச்சி

புதன் 8, ஜனவரி 2020 1:05:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் அம்பை தாலுகா கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அடைச்சாணி ஊராட்சியை மீண்டும் அம்பை தாலுகாவில் இணைக்க தென்காசி ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதால்  அந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட  பள்ளக்கால், இடைகால், ரெங்கசமுத்திரம், அடைச்சாணி ஆகிய ஊராட்சி பகுதிகள் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில் தென்காசி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. இதற்கு பள்ளக்கால், ரெங்க சமுத்திரம். இடைகால். அடைச்சாணி ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அதனடிப்படையில் பள்ளக்கால், ரெங்கசமுத்திரம், இடைகால் ஆகிய ஊராட்சி பகுதிகள் மீண்டும் அம்பாசமுத்திரம் தாலுகாவில் இணைக்கப்பட்டது. ஆனால் அடைச்சாணி  ஊராட்சி பகுதி மட்டும் அம்பை தாலுகாவோடு இணைக்கப் படவில்லை.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அடைச்சாணி ஊர் பொதுமக்கள் தொடர்ந்து ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அடைச்சாணி ஊராட்சியை அம்பாசமுத்திரம் தாலுகா ரோடு இணைக்க வேண்டும் என அப்பகுதி பொதுகமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  ஏற்கனவே எங்கள் ஊருக்கு அருகிலுள்ள பள்ளக்கால், இடைகால், ரங்கசமுத்திரம் ஆகிய ஊராட்சி பகுதிகள் மீண்டும் அம்பாசமுத்திரம் தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே எங்கள் ஊராட்சியையும் அம்பாசமுத்திரம் தாலுகாவில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அடைச்சாணி ஊராட்சி பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் உங்களது கோரிக்கைகள் அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு அடைச்சாணி ஊராட்சி மீண்டும் அம்பாசமுத்திரம் தாலுகாவில்  இணைப்பதற்கு உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும்  என்று ஆட்சியர் கூறவே பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து

அருணாசலம் அடைச்சாணிJan 9, 2020 - 06:18:49 PM | Posted IP 157.5*****

நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory