» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை

வெள்ளி 10, ஜனவரி 2020 1:17:03 PM (IST)குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலம்; குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 1ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சப்பர வீதி உலா நடைபெற்றது.  மேலும் தினமும் காலை 9.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் நடராசப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 4ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், 5ம் தேதி கலையில் நடராசர் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருத்தேரோட்டமும், 8ம் தேதி சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான 10ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. தாண்டவ இசை முழங்க நடைபெற்ற இத்தீபாராதனை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் காலை 5 மணிக்கு கோவில் திரிகூட மண்டபத்தில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory