» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்ட டாஸ்மாக் கடைகள் மூடல்

வெள்ளி 10, ஜனவரி 2020 5:32:56 PM (IST)

வரும் ஜன 16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என மாவட்டஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

16.01.2020 (வியாழன்) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2020 (ஞாயிறு) குடியரசு தினம்; ஆகியவற்றை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மேற்படி தினங்களில் மூடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (எப் எல் வகை பார்கள்) ஆகியவைகள் 16.01.2020 மற்றும் 26.01.2020 ஆகிய 2 நாட்களில் மட்டும் மூடப்பட்டிருக்கும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

வெள்ளி 21, பிப்ரவரி 2020 7:14:48 PM (IST)


Sponsored Ads




Tirunelveli Business Directory