» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

வெள்ளி 10, ஜனவரி 2020 7:04:28 PM (IST)

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடந்த 29-ந்தேதி மேலப்பாளையத்தில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை கண்ணன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
 
இதையடுத்து அவரை நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


மக்கள் கருத்து

சண்முகசுந்தரம்Jan 10, 2020 - 09:37:12 PM | Posted IP 117.2*****

தொலைக்காட்சிகளில் இந்தச்செய்தி வரவில்லையே..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory