» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டி

வெள்ளி 10, ஜனவரி 2020 8:41:46 PM (IST)தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரகேரளம்புதூர் வட்டம் சுரண்டை குறுவட்டம் சுரண்டை -1 கிராமத்தில் உள்ள பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோலப்போட்டி நடைபெற்றது. 

இக்கோலப்போட்டியில்  5 மாணவிகள் வீதம் 19 குழுக்களாக மொத்தம் 90 மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் பரிசுகள் வழங்கி வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேசினார். தலைமையாசிரியர் சவுந்தராஜன் துரை, சுரண்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் . நா.மாரியப்பன், சுரண்டை-1 கிராம நிர்வாக அலுவலர் கே பாலு,  கிராம உதவியாளர் மற்றும் பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory