» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சனி 11, ஜனவரி 2020 10:39:09 AM (IST)



குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
 
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சுயநிதி பிரிவு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு வணிகவியல் துறை சுயநிதி பிரிவின் தலைவி உதவி பேராசிரியை முனைவர்  காமினி(எ)முத்து கிருஷ்ணம்மாள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்லூரி  முதல்வர் கீதா கலந்து கொண்டார். கல்லூரி பேராசிரியைகள் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விழாவில் உதவி பேராசிரியைகள் கீதா அஞ்சலி,  ராமலட்சுமி, ராமலட்சுமி, முத்துலட்சுமி, சங்கரகோமதி,  சண்முகசுந்தரி, ரதி, முருகேஸ்வரி, ஜோதி, மகாதேவி ,சிந்துஅபிராமி. திவ்யா.ராகதேவி. சுந்தரி. செல்வராணி, பொன்சக்திசூர்யா,  சண்முகப்பிரியா.  ஜெய் பாக்கியலட்சுமி மற்றும் வணிகவியல் துறை சுயநிதி பிரிவு மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory