» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதியவரை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு: ஒருவர் கைது

சனி 11, ஜனவரி 2020 11:04:27 AM (IST)

ஆன்லைன் வர்த்தகம் என முதியவரை ஏமாற்றி அவரை அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1 லட்சத்தை பறித்தவரை போலீசார் கைது செய்து மேலும் 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி கீழப்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (60). இவரிடம் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் இந்திரா நகரைச் சேர்ந்த நாகூர் மீரான் ( 40) என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இரு மடங்காக்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார். முதல் கட்டமாக ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தால் ஆன்லைன் பத்திரப்பதிவு செய்து இரண்டு லட்சமாக்கி தருவதாக கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பிய வெங்கட்ராமன் ஒரு லட்சம் பணத்துடன் நாகூர் மீரானை சந்தித்தார். அப்போது நாகூர் மீரான் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து வெங்கட்ராமனை அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை பறித்துள்ளனர்.

இது குறித்து வெங்கட்ராமன் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடிக் கும்பலை சேர்ந்த நன்னகரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரானை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகூர் மீரான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் கருப்பு பேப்பர்களை திராவகத்தில் அலசி கரன்சி நோட்டுகளாக மாற்றித் தருவதாக கூறி சிலரிடம் பணம் மோசடி செய்ததாக இவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இவரது கூட்டாளிகள் 3 பேரை  வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory