» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவர் பலி : மனைவி படுகாயம்

சனி 11, ஜனவரி 2020 6:57:52 PM (IST)

பாளை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் கல்லாண்டான் (42) விவசாயி. இவரது மனைவி சங்கரம்மாள். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் பொங்கலுக்கு புது துணி எடுப்பதற்காக நெல்லைக்கு வந்திருந்தனர். பின்னர் மாலையில் இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். பாளை வி.எம். சத்திரத்தை அடுத்த திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்லாண்டான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory