» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு : எஸ்பி., நேரில் ஆய்வு

ஞாயிறு 12, ஜனவரி 2020 12:21:17 PM (IST)சென்னை தலைமையிடத்து காவல்துறை தலைவர் செந்தாமரைக்கண்ணன், தலைமையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன், மேற்பார்வையில் இன்று தூத்துக்குடியில் சப்இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வில் 3252 ஆண் விண்ணப்பதாரர்களும் மற்றும் 695 பெண் விண்ணப்பதாரர்களும் மொத்தம் 3947 பொது விண்ணப்பதாரர்கள் இன்று (12ம் தேதி) தூத்துக்குடியில் நான்கு தேர்வு மையங்களில் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி, மில்லர்புரம் பி.எம்.சி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 1500 ஆண் விண்ணப்பதாரர்களும், செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் 1000 ஆண் விண்ணப்பதாரர்களும், விகாசா மேல்நிலைப்பள்ளியில் 500 ஆண் விண்ணப்பதாரர்களும், (4) புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 695 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 252 ஆண் விண்ணப்பதாரர்களும் மொத்தம் 947 விண்ணப்பதாரர்களும் எழுத்து தேர்வு எழுதவுள்ளனர். இந்த தேர்வுகளை சென்னை தலைமையிடத்து காவல்துறை தலைவர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 


மக்கள் கருத்து

policeJan 12, 2020 - 05:05:15 PM | Posted IP 162.1*****

ஐஜி வேடிக்கை பார்க்க போனாரா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory