» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊர் ஊராக கொள்ளையடித்து நகைகடை நடத்திய கும்பல் : 4 பேர் கைது

ஞாயிறு 12, ஜனவரி 2020 12:35:34 PM (IST)

நெல்லையில் 77 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை, 400 கிலோ மீட்டர் பயணம் செய்து 460 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் பிடித்துள்ளனர்.

திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது வீட்டில், கடந்த டிசம்பர் மாதம் 77 சவரன் தங்க நகை கொள்ளை போனது. கைரேகை உள்ளிட்ட எந்த தடயமும் சிக்காத நிலையில், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் போலி நம்பர் பிளேட்டுடன் ஒரு கார் சென்றது தெரியவந்தது.இதையடுத்து சுங்கச்சாவடிகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 460 சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போலீசார், அந்தக் கார் சென்ற திசையை கண்டுபிடித்தனர்.

இதில் 100 கிலோ மீட்டர் சென்றதும், போலி நம்பர்பிளேட் கார் மாயமாகி, பின்னர் வேறொரு நம்பர் பிளேட்டுடன் செல்வது தெரிய வந்தது. அதன்பிறகு 3 வது முறையாகவும் அந்த கார் நம்பர் பிளேட் மாற்றப்பட்டு திருப்பூரில் காணாமல் போகிறது. தொடர்ந்து திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் சிசிடிவி காட்சியில் 4 பேர் காரிலிருந்து இறங்குவது பதிவாகி இருந்தது.அதில் உள்ள உருவத்தை வைத்து அடையாளம் கண்ட நெல்லை போலீசார், திருப்பூரில் வைத்து சக்தி, ராமஜெயம், முகமது ரபீக், யாசர் அராபத் ஆகிய 4 பேரை  கைது செய்தனர்.

விசாரணையில் சொகுசு காரில் வலம் வந்து, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் என்றும், 50 க்கும் மேற்பட்ட ஊர்களில் கொள்ளையடித்து திருப்பூரில் நகைக்கடை என்ற பெயரில் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.இந்நிலையில் வியாபாரம் பெருக குல தெய்வத்தைக் கும்பிட கூட்டாளிகளுடன் நெல்லை வந்த குருவி சக்தி, தமிழ்ச்செல்வன் வீட்டில் கைவரிசை காட்டியதை அடுத்து போலீசில் சிக்கிக் கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory