» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் பொங்கல் தொகுப்பு பரிசு : எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழங்கினார்

திங்கள் 13, ஜனவரி 2020 10:32:20 AM (IST)தென்காசியில் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கினார்.

தென்காசி நகராட்சி ஆசாத்நகர் பகுதியில் தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலாளர் சுடலை தலைமை தாங்கினார். அதிமுக மாவட்ட பொருளாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான சண்முகசுந்தரம், தென்காசி ஒன்றிய செயலாளரும் நிலவள வங்கி தலைவருமான சங்கரபாண்டியன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு மற்றும் ரூ.1000ம் ரொக்கம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி, சாமி ஆசாரி, அகமது ஷா, அப்துல்காதர், பீர்முகம்மது. பேரூர் செயலாளர்கள் இலஞ்சி மயில்வேலன், மேலகரம் வழக்கறிஞர் கார்த்திக்குமார், கூட்டுறவு மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory