» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொங்கல் விளையாட்டுவிழா விழிப்புணர்வு கூட்டம்

திங்கள் 13, ஜனவரி 2020 5:37:42 PM (IST)பொங்கல் விளையாட்டு விழா நடத்துவது தொடர்பாக போலீசார் சார்பில் விழிப்புணர்வு கலந்தாய்வு சுரண்டையில் கூட்டம் நடந்தது.

சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் விளையாட்டு விழாக்கள் அமைதியாக நடத்துவது தொடர்பாக போலீசார் சார்பில் கலந்தாய்வு கூட்டம் தென்காசி எஸ்பி சுகுணா சிங் ஆலோசனை பேரில் நடந்தது.ஆலங்குளம் துணை கோட்ட பகுதிகளில் 92 இடங்களிலும் அதில் சுரண்டை காவல் சரகத்திற்குட்பட்ட சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 29 இடங்களிலும் பல்வேறு சங்கங்கள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், சார்பில் பொங்கல் விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. 

இதனை அமைதியாக நடத்தவும், பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும்,  போலீஸார் மற்றும் விளையாட்டுப் போட்டி அமைப்பாளர்களுக்கிடையே கலந்தாய்வு கூட்டம் ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர் உசேன் தலைமையில் நடந்தது. சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் விளையாட்டு விழா கிளை நடத்தும் பொறுப்பாளர்கள் விழாக்களை அமைதியாக நடத்துவதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள், எவ்வித விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். 

முதலுதவி சிகிச்சைக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும், இடையூறும் இல்லாமல் நடத்தப்பட வேண்டிய விளையாட்டுக்கள், டிஜிட்டல் பேனர் குறித்த விளக்கம், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்தல், புகையில்லா பொங்கல் கொண்டாட வேண்டிய அவசியம், மற்றும் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதின் அவசியங்கள் குறித்து டிஎஸ்பி ஜாகிர் உசேன் பேசினார்.

கூட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், சிங்கராஜ், சமுத்திரம், காமராஜர் நகர் குழு செல்வன், அதிமுக சார்பில் ஜெயப்பிரகாசம், ஜவகர் தங்கம், தங்கராஜ், அச்சங்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளத்துரை, ராமு, மணிகண்டன், ஆறுமுகம், காளிராஜா, முருகன், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory