» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்கள் குறை தீர்க்கும் நாளில் நலத்திட்ட உதவிகள் : நெல்லை மாவட்டஆட்சியர் வழங்கல்

திங்கள் 13, ஜனவரி 2020 7:33:39 PM (IST)


திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 நபர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்று (13-01-2020) வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு மென்பொருள் அடங்கிய 14 ஐpயன வழங்கியும், 9 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களையும் 7 நபர்களுக்கு உதவித்தொகைளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் இன்று (13-01-2020) வழங்கினார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னித்தொகை, விபத்து மரணத்தொகை, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் திருநெல்வேலி கோட்டாட்சியர் மணிஷ் நாராணவரே சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் சசிரேகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory