» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டை பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது

செவ்வாய் 14, ஜனவரி 2020 10:16:30 AM (IST)

சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில்  பொங்கல் விழா  நடைபெற்றது. 

இந்த விழாவினை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம் தொடங்கி  வைத்தாா். பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் தலைமை வகித்தாா். முதல்வா் பொன் மனோன்யா முன்னிலை வகித்தாா். இவ்விழாவில் மாணவ, மாணவியா்கள், ஆசிாியா்கள் துணையுடன் சமத்துவ பொங்கல் வைத்து  ஒருவொருக்கொருவா் பாிமாறி மகிழ்ந்தனா், தலைமை ஆசிாியா் மாாிக்கனி  நன்றி கூறினார். 

அதனைத் தொடா்ந்து பாரம்பாிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது, நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிாியா்கள் இலங்காமணி மற்றும் அருள் ஒளி ஏற்பாடு செய்திருந்தனா், ஆசிாியைகள் அபிதா மற்றும் கோமதி மாணவா்களை ஒருங்கிணைத்தாா். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது, விழாவில் பெற்றோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory