» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆம்னி பஸ்சை குடிபோதையில் ஓட்டியவர் மீது வழக்கு

செவ்வாய் 14, ஜனவரி 2020 10:36:40 AM (IST)

சுரண்டையில் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டதில் ஆம்னி பஸ்சை குடிபோதையில் ஓட்டிய டிரைவர் மீது  வழக்கு பதிவு செய்தனர்.

சுரண்டை அண்ணா சிலை அருகே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக  சுரண்டையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் ஆம்னி பஸ்சை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பஸ்ஸை ஓட்டி வந்த டிரைவர் பிரபாகர் (37) என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பயணிகள் அதிகமாக பயணிக்கும் ஆம்னி பஸ்ஸில் டிரைவர் குடிபோதையில் வண்டி ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory