» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாேட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் பலி

செவ்வாய் 14, ஜனவரி 2020 12:33:39 PM (IST)



சுரண்டையில் நேற்று மாலை பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுரண்டை சிவகுருநாதபுரம் ஓடை தெருவை சேர்ந்தவர் பால்துரை மகன் சதீஷ்குமார் (21 ) இவர் தென்காசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு பயின்று வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். சுரண்டை சாம்பவர்வடகரை ரோட்டில் சார்பில் ஆலமரம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த பைக்கும் ஒன்றோடு ஓன்று நேருக்கு நேர் மோதியது இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இரண்டு பைக்குகளும் சுக்குநூறாக நொறுங்கியது. அதில் சதீஷ் குமார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

எதிரில் வந்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் தினேஷ்குமார் (20)பலத்த காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுரண்டை எஸ்ஐ., உமா மகேஸ்வரி வழக்குபதிவு செய்தார் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மேல் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த மாணவன் சதீஷ் குமாரின் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory