» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

செவ்வாய் 14, ஜனவரி 2020 4:45:47 PM (IST)தென்காசி மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா தென்காசி கோட்டாட்சி தலைவர்  பழனிக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமச்சந்திர பிரபு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அதிகாரிகள், கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மொத்தம் 556 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் செங்கோட்டை ஒன்றியம் இலத்தூர் முன்னாள்  ஒன்றிய கவுன்சிலர் முருகன் மற்றும் இலத்தூர் அதிமுக கிளைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் இலத்தூர் பெரியகுளத்தில் பாசன வாய்க் கால்களில் வேளாண்மை பொறியியல் துறையினரால் காங்கிரீட் தளம் அமைத்து தரவேண்டும் . இலத்தூர் பொது மயானத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுவினை அளித்தனர். 

குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகா நகரில் தரமான சாலைகள் அமைக்க வலியுறுத்தி இளைய பாரதம் அமைப்பின் தலைவர் வெங்கடேஷ் கோரிக்கை மனு கொடுத்தார். பொய்கை ஊராட்சி சுப்பிரமணியபுரம் பொதுமக்கள் சார்பில் பொது குடிநீர் குழாய் அமைத்து தரக்கோரி முருகன் என்பவர் மனு அளித்தார். கூட்டத்தில் 44 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண உதவித் தொகையாக 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory