» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கார் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் பரிதாப சாவு: நண்பர்கள் 5பேர் படுகாயம்

வெள்ளி 17, ஜனவரி 2020 11:44:47 AM (IST)

தேனி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 5பேர் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி அய்யலு நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (38)), தனியார் ஷிப்பிங் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது நண்பர்கள் 5பேருடன் காரில் மூணாறுக்கு சென்றுள்ளார். காரை இவரது நண்பரான சென்னையைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த கார் மூணாறு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், தேனி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன் மூலம் உசிலம்பட்டி, தேனி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த ராஜாவுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

JolwinJan 19, 2020 - 04:31:18 PM | Posted IP 162.1*****

RIP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory