» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் சார்பில் பொங்கல் விழா

வெள்ளி 17, ஜனவரி 2020 5:48:58 PM (IST)தூத்துக்குடியின் 20 கிராமங்களில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், மங்களகரமான ‘தை’ தமிழ் மாதம் பிறந்ததையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம மக்களுடன் சேர்ந்து ஒரு பாரம்பரிய உணர்வுடன் தமிழ் அறுவடை திருவிழாவான பொங்கலை ஒரு வாரம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடியது. தூத்துக்குடியின் 20 முக்கிய கிராமங்களில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு அன்பளிப்பு மற்றும் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது.

கிராம மக்களிடையே பொங்கல் திருவிழா குறித்த சமுதாய உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், மியூசிக்கல் சேர், ரங்கோலி போட்டிகள், நடனம், இசை முதலிய பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தெற்கு வீர பாண்டியபுரம், A. குமாரரெட்டிபாளையம், T. குமரகிரி, பண்டாரம்பட்டி, தெற்கு சனகரபேரி, வடக்கு சங்கரபேரி, மீளவிட்டான், சில்வர்புரம், மாடத்தூர், அய்யனடைப்பு, சோரிஸ்புரம், வடக்கு சிலுக்கண்பட்டி, தெற்கு சிலுக்கண்பட்டி, சுவாமிநாதம், நயினார்புரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கயிலாசபுரம், முத்துசாமிபுரம், ராஜாவின்கோவில் மற்றும் தூத்துக்குடி டவுன் ஆகியவை நடைபெற்ற இவ்விழாக்களில் 30,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

உண்மைJan 20, 2020 - 01:03:46 PM | Posted IP 162.1*****

INTU YELLAM ORU POLAIPPU

K.ganeshanJan 18, 2020 - 12:11:35 PM | Posted IP 162.1*****

Congratulations to sterlite.let us all pray God to get a favourable verdict from HC to continue this community services.

RajmpJan 18, 2020 - 10:37:00 AM | Posted IP 108.1*****

Romaba mukkiymanna news , keep it this news in junk or trash

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory