» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழுதான சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் : ஆணையருக்கு கீதாஜீவன் எம்எல்ஏ., மனு

வெள்ளி 17, ஜனவரி 2020 8:13:52 PM (IST)

தூத்துக்குடியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு கீதாஜீவன் எம்எல்ஏ., மனு அளித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்எல்ஏ.,கீதாஜீவன் மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள மனுவில், அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகரின், அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளது. மழைநீரை வெளியேற்ற தோண்டிய பள்ளங்களால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையம், மற்றும் விஇ ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புழுதி மண் மற்றும் தூசு ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாநகரில் பழுதடைந்த சாலைகளையும், வடிகால் தோண்டிய பள்ளங்களையும் சரி செய்ய வேண்டும் என மாநகர ஆணையருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் காலதாமதம் ஆகிறது.

எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே சாலைகளை சீரமைத்திடவும், தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்படும் தூசு படலத்தை சரி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். அப்படி இல்லாத பட்சத்தில் தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் மாநகர அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து காெள்கிறேன் என கூறியுள்ளார்.  


மக்கள் கருத்து

பா.கண்ணன்Jan 18, 2020 - 02:33:14 PM | Posted IP 108.1*****

நன்றி நன்றி நன்றி

பா.காளிதுரை பி.காம்Jan 18, 2020 - 11:54:11 AM | Posted IP 162.1*****

அக்கா P.கீதா ஜீவன் MLA அவர்களுக்கு 14 வது வார்டு பொதுமக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory