» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டையில் எம்ஜிஆர் பிறந்த தின விளையாட்டு விழா

சனி 18, ஜனவரி 2020 10:37:46 AM (IST)சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்ததின விழா மற்றும் தை பொங்கல் விளையாட்டு விழா வி கே எஸ் சக்திவேல் தலைமையில் நடந்தது. 

இந்த நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரகாசம், தேனம்மாள் தங்கராஜ், மூவே சந்திரன், கடற்கரை நாடார், ஞானசேகர், குட்டி ராஜ், முருகன், மாரியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஜெ பேரவை தலைவரும் விழா ஒருங்கிணைப்பாளருமான ஜவகர் தங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் வெள்ளைச்சாமி, பாலமுருகன், சிவா, பேச்சி முத்துப்பாண்டியன், செல்லத்துரை, தனுஷ்கோடி, சண்முகம், துரை நாடார், சிவராமகிருஷ்ணன், வேலாயுதம், ஆனந்த், சரவணன், கோபால், மாரி, தங்கச்சாமி, முருகன் உள்ளிட்ட நகர அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் நடந்த எம்ஜிஆர் பிறந்த தின விழாவில் எம்ஜிஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோகிலா, அழகுமாரி ஆகியோர் எம்ஜிஆர் வாழ்க்கை சரித்திரம் குறித்து பேசினர். முடிவில் மாரி குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் ஜவகர் தங்கம் தலைமையில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory