» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேங்காய் தலையில் விழுந்து லோடுமேன் பலி

சனி 18, ஜனவரி 2020 11:28:56 AM (IST)

தூத்துக்குடி அருகே தேங்காய் தலையில் விழுந்து பைக்கில் சென்ற லோடுமேன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி காரனேசன் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் மாரியப்பன் (44). இவர் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். நேற்று இவர் கூட்டாம்புளியிலிருந்து குரும்பூருக்கு பைக்கில் சென்றாராம். தண்ணீர்பந்தல் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த தென்னைமரத்திலிருந்து தேங்காய் தலையில் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். 


மக்கள் கருத்து

hi hi hiJan 18, 2020 - 12:05:23 PM | Posted IP 108.1*****

roddil thennai maram valarthaal kaithu.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory