» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெற்றோர் வீட்டிற்கு வந்த இளம்பெண் தற்கொலை

சனி 18, ஜனவரி 2020 1:26:54 PM (IST)

தென்காசி அருகே பொங்கல் பண்டிகைக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே உள்ள சின்ன பானங்களை சேர்ந்தவர் சுடலை (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (30). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். பொங்கல் பண்டிகைக்காக முத்துலட்சுமி சேர்ந்தமரம் அருகே உள்ள வல்லராமாபுரத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தாராம். இதனிடையே கணவன்-மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். 

இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென முத்துலட்சுமி பெற்றோர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory