» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்தமிழக அளவிலான யோகா ,ஸ்கேட்டிங் போட்டி

சனி 18, ஜனவரி 2020 5:37:30 PM (IST)

தென்காசி அருகே மாதாபுரம் தோரணமலையில் தென் தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

தென்காசி அருகே உள்ள மாதாபுரம் தோரணமலை சிஜே.திருமண மண்டபத்தில்  2020 ஆம் ஆண்டிற்கான தென்தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி லட்சியம் அசோசியேசன் சார்பில் நடைபெற்றது.  போட்டிகளில் தென்காசி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், சுரண்டை,செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் வயது அடிப்படையில் போட்டிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. யோகா மற்றும் ஸ்கேட்டிங்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். கண்ணன் மோகன். பாவூர்சத்திரம் அம்பிகா கோல்ட் கவரிங் உரிமையாளர் மோகன், உடற்கல்வி ஆசிரியர் அஜித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சியம் அசோசியேசன் தலைவரும் துணை பேராசிரியருமான பாலகணேசன் வரவேற்று பேசினார். பேராசிரியர்கள் ரேவதி ஆறுமுக செல்வன், கயற்கண்ணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ரஞ்சித்சிங், அடைக்கலப்பட்டணம் எஸ் எம் ஏ கல்வி நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் மகேஸ்வரி, முன்னாள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் எஸ்கேடிபி காமராஜ், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகி செண்பகராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.இ சுபாஷினி, முக்கூடல் சொக்கலால் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் கோமதி சங்கர் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கினர். முடிவில் கவிதா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory