» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடன் தொல்லையால் மூன்று பேர் தற்கொலை

சனி 18, ஜனவரி 2020 6:20:24 PM (IST)

தென்காசி அருகே கடன் தொல்லை காரணமாக தாய், தந்தை மேலும் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த அவர்களது மகன் மூவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த சந்தானம் பலசரக்குப் பொருட்களை விற்கும் ஏஜன்சி எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் மகன் ஆரோக்கிய ஸ்ரீதர் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வரும் 27ஆம் தேதி ஆரோக்கிய ஸ்ரீதருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆரோக்கிய ஸ்ரீதர் முதலீடு செய்திருந்ததாகவும் அதில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு, கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

பொங்கலன்று கடன் கொடுத்தவர்கள் ஆரோக்கிய ஸ்ரீதர் வீட்டுக்கே வந்து தகராறில் ஈடுபட்டதோடு, வீட்டு உபயோகப் பொருட்களையும் எடுத்துச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.இதனால் ஏற்பட்ட அவமானம், மன உளைச்சலிலேயே குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory