» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி அருகே விவசாயியிடம் பணம் பறிப்பு

சனி 18, ஜனவரி 2020 7:14:33 PM (IST)

நாங்குநேரி அருகே விவசாயியிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (42). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது நண்பர் களக்காடு கீழத்தெருவை சேர்ந்த முத்துவுடன் நாங்குநேரி சென்றார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் பைக்கில் களக்காடு வந்து கொண்டிருந்தார்களாம். தெற்கு நாங்குநேரி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே வந்த போது பிரேம்குமார் பைக்கை நிறுத்தி விட்டு செல்போன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சாமிதுரை என்பவர் பிரேம்குமாரிடம் பொங்கல் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரேம்குமார் மறுத்ததால் அரிவாளை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த சுமார் ரூ. 2 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சாமிதுரையை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory